ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கோடை மழைக்கு காத்திருக்கும் விவசாயிகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் சின்னவெங்காயம், பருத்தி, மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் கோடைமழைக்கு காத்திருக்கிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
தமிழகத்தில் பல இடங்களில் கோடை மழை பெய்துள்ள நிலையில் அக்னி நட்சத்திரம் மழையோடு தொடங்கியுள்ளது. விருதுநகரில் சிவகாசி பகுதியில் மழை பெய்திருந்தாலும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கோடை மழை பெய்யவில்லை.
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள பிள்ளையார்நத்தம், தொட்டியபட்டி, பூவாணி பகுதியில் ஏராளமான விவசாயிகள் பருத்தி மற்றும் சின்னவெங்காயம் பயிரிட்டுள்ளனர். கிணற்று பாசனத்தை நம்பி பயிரிட்டுள்ள நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நடவு செய்து 2 மாதம் ஆன நிலையில் சின்ன வெங்காயம் பயிரை காப்பாற்ற டேங்கர் லாரிகளில் இருந்து தண்ணீரை விலை கொடுத்து வாங்கி தெளிக்கும் நிலை இருக்கிறது.
இதேபோல நாச்சியார்பட்டி, வங்காருபட்டி, சென்னாகுளம், ராமச்சந்திராபுரம் பகுதி விவசாயிகள் கிணற்றுப்பாசனத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இவர்களும் கோடை மழையை எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.கடந்த ஆண்டு கடும் வறட்சி இருந்த நிலையிலும் ஓரளவுக்கு கோடை மழை பெய்து கைகொடுத்ததாகவும் ஆனால் இந்த ஆண்டு ஏமாற்றி வருவதாகவும் விவசாயிகள் கவலையோடு தெரிவித்தனர்.

Related Tags :
Next Story