மாவட்ட செய்திகள்

பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Sleeping a graduate youngster

பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவட்டார் அருகே பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவட்டார்,

திருவட்டார் அருகே சாரூர் பகுதியை சேர்ந்தவர் வேலப்பன். இவருடைய மகன் விஷ்ணு (வயது 22), பி.பி.ஏ. பட்டதாரி. படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கூலி வேலைக்கு சென்று வந்தார். இவர் தனது தாயாருடன் அதிக பாசத்துடன் இருந்து வந்தார்.


கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தாயார் இறந்து விட்டார். அதன்பின்பு, விஷ்ணு மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டார்.

சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டுக்கு சென்றவர் தனது அறையில் தூங்க சென்றார். மறுநாள் காலையில் வெகு நேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அவரது தந்தை அறையின் கதவை தட்டிப்பார்த்தார். ஆனால் உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு விஷ்ணு தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுகுறித்து திருவட்டார் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்ணுவின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.