மாவட்ட செய்திகள்

காவிரியில் தண்ணீர் திறக்க மறுப்பதால் சுப்ரீம் கோர்ட்டின் கடும் விளைவுகளை கர்நாடகம் சந்திக்க நேரிடும் + "||" + Karnataka can face heavy consequences for refusing to open water in Kaveri

காவிரியில் தண்ணீர் திறக்க மறுப்பதால் சுப்ரீம் கோர்ட்டின் கடும் விளைவுகளை கர்நாடகம் சந்திக்க நேரிடும்

காவிரியில் தண்ணீர் திறக்க மறுப்பதால் சுப்ரீம் கோர்ட்டின் கடும் விளைவுகளை கர்நாடகம் சந்திக்க நேரிடும்
காவிரியில் தண்ணீர் திறக்க மறுப்பதால் சுப்ரீம் கோர்ட்டின் கடும் விளைவுகளை சந்திக்க கர்நாடகம் நேரிடும் என்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.
தஞ்சாவூர்,

காவிரி நீர் பிரச்சினை தொடர்பான வழக்கில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் தண்ணீர் திறந்து விடாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.


ஆனாலும் காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக அரசு கூறி விட்டது. இதனால் சுப்ரீம் கோர்ட்டின் கடும் விளைவுகளை கர்நாடகம் சந்திக்க நேரிடும்.

வருத்தமளிக்கிறது

தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், நீட் தேர்வு எழுதுவதற்கான மையங் கள் கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஒதுக்கீடு செய்ததை ஏற்க தயாராக இல்லை. இது வருத்தமளிக்கிறது. இதனால் மாணவர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இருப்பினும் தமிழக அரசு வெளிமாநிலங்களுக்கு தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறது. எதையும் தாங்கும் இதயம் பெறும் வகையில் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.