விதான்பவன் காசாளருக்கு 5 ஆண்டு ஜெயில்
ரூ.53 லட்சம் மோசடியில் ஈடுபட்ட விதான்பவன் காசாளருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
மும்பை,
மும்பையில் உள்ள விதான்பவனில்(சட்டமன்றம்) காசாளராக பணியாற்றியவர் மனோஜ். இவர் கடந்த 2005-ம் ஆண்டு சட்டமேலவை உறுப்பினராக இருந்த அனில் கோதேவிற்கு மருத்துவ பணப்பலனை கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டார். இதுகுறித்து மந்திராலயா அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் மனோஜை கைது செய்து நடத்திய விசா ரணையில், சுமார் ரூ.53 லட்சத்தை அவர் மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.
இந்த மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இதில், வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு மோசடியில் ஈடுபட்ட விதான்பவன் காசாளர் மனோஜிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார்.
மேலும் மோசடி பணத்தில் அவர் வாங்கிய வீடுகள் உள்ளிட்ட சொத்துகளை அரசு கையகப்படுத்தவும் உத்தர விட்டார்.

Related Tags :
Next Story