மாவட்ட செய்திகள்

அம்மா திட்ட முகாம் + "||" + Amma project camp

அம்மா திட்ட முகாம்

அம்மா திட்ட முகாம்
காஞ்சீபுரம் மாவட்டம் சென்னக்குப்பம் ஊராட்சியில் உள்ள ஒரகடம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஸ்ரீபெரும்புதூர் துணை தாசில்தார் சின்னப்பா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 21 மனுக்களை பெற்றுக்கொண்டார்.
படப்பை,

சென்னக்குப்பம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சாந்தி பாண்டியன், வருவாய் ஆய்வாளர் அரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டு மனை பட்டா கோருதல் உள்ளிட்ட 21 கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடம் இருந்து ஸ்ரீபெரும்புதூர் துணை தாசில்தார் சின்னப்பா பெற்றுக்கொண்டார்.


இதில் 5 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. 16 மனுக்கள் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக அனைவரையும் சென்னக்குப்பம் கிராம நிர்வாக அதிகாரி கவிதா வரவேற்றார். இதில் கிராம நிர்வாக உதவியாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.