மதுரையில் வினாத்தாளில் குளறுபடி: 5 மணி நேரம் தாமதமாக தொடங்கிய நீட் தேர்வு, பெற்றோர்கள் போராட்டம்
மதுரையில் வினாத்தாளில் ஏற்பட்ட குளறுபடியால் 5 மணி நேரம் தாமதமாக நீட் தேர்வு தொடங்கியது. பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை,
மருத்துவ படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் எனப்படும் தேசிய தகுதி தேர்வு இந்தியா முழுவதும் நேற்று நடந்தது. மதுரை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 800 பேர் தேர்வு எழுதுவதற்காக கேந்திரிய வித்யாலாயா பள்ளிகள், நாய்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்பட 20 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு நேரம் காலை 10 மணி முதல் 1 மணி ஆகும்.
ஆனால் தேர்வு மையங்களில் காலை 6 மணி முதலே மாணவர்கள் குவிய தொடங்கி விட்டனர். 8.30 மணி முதல் மாணவர்களை மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக்கு பின் தேர்வு மையத்திற்குள் அனுப்ப தொடங்கினர். மாணவிகள் அணிந்து இருந்த கொலுசு, தலையில் வைத்திருந்த கிளிப் ஆகியவற்றை அகற்றினர். வக்பு வாரிய கல்லூரியில் ராமேசுவரத்தை சேர்ந்த சத்யா பிரவீனா என்ற மாணவி முழு கை சட்டை அணிந்திருந்த சுடிதாருடன் வந்திருந்தார். ஆனால் அவரை மையத்திற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து தேர்வு அலுவலர் ஒருவர் அந்த மாணவியின் முழுச் சட்டையை கிழித்து எறிந்து அரைக்கை சட்டையாக மாற்றினார். இதனைத்தொடர்ந்து அந்த மாணவியை மையத்திற்கு உள்ளே அனுமதித்தனர். இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகளால் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் செல்வதற்கு திணறினர்.
மேலூரை சேர்ந்த டயானா என்ற மாணவி தனது தாயுடன், பசுமலையில் உள்ள தேர்வு மையத்திற்கு வந்திருந்தார். ஆனால் ஹால் டிக்கெட்டை வீட்டிலேயே வைத்து விட்டார். அந்த நேரத்தில் அங்கிருந்த மணி என்பவர் தனது காரில் மாணவி டயானாவை அழைத்துக் கொண்டு மேலூர் சென்று அங்கிருந்து ஹால்டிக்கெட்டை எடுத்து கொண்டு வந்து உரிய நேரத்தில் டயானாவை தேர்வு எழுத ஏற்பாடு செய்தார். தமிழரசன் என்ற மாணவன் அம்மை நோய் பாதிப்புடன் நாய்ஸ் பள்ளிக்கூட தேர்வு மையத்திற்கு தேர்வு எழுத வந்திருந்தார்.
மதுரை நாய்ஸ் பள்ளியில் சுமார் 720 மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதில் 120 மாணவர்களின் வினாத்தாள் அவர்கள் விருப்ப மொழியில் அல்லாமல் வேறு மொழியில் இருந்தது. அதாவது ஆங்கில மொழியில் கேட்டவர்களுக்கு தமிழும், தமிழ் மொழியில் கேட்டவர்களுக்கு இந்தி வினாத்தாளும் கொடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் என்ன செய்வதென்றே அறியாமல் தவித்தனர். இது குறித்து அவர்கள் தேர்வு மைய அலுவலர்களிடம் புகார் செய்தனர்.
அவர்கள் இந்த தகவலை சி.பி.எஸ்.இ.யின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவர்கள் வழங்கிய ஆலோசனையின்படி, பாதிக்கப்பட்ட அந்த 120 மாணவர்களிடம் வழங்கப்பட்ட வினாத்தாளை மீண்டும் பெற்று கொண்டனர். பின்னர் அவர்களை தேர்வு எழுத அனுமதிக்காமல் ஒரு அறைக்குள் அமர வைக்கப்பட்டனர். யாரையும் வெளியே அனுமதிக்க வில்லை. அவர்களுக்கு அங்கேயே மதிய உணவும் வழங்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு, அவரவர் விருப்ப மொழியிலான வினாத்தாள் நகல் எடுத்து வழங்கப்பட்டன.
இதனால் சுமார் 5 மணி நேர தாமதத்திற்கு பின் அவர்கள் மாலை 3 மணிக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். 6 மணி வரை அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களிடம் வழங்கப்பட்ட தேர்வுக்கான நகல் வினாத்தாள்களை தேர்வு மைய அலுவலர்கள் பெற்று கொண்டனர். இதனால் மாணவர்கள் வினாத்தாள்கள் இல்லாமல் வெளியே வந்தனர். ஆனால் அவர்களின் பெற்றோர்கள் வினாத்தாளை எங்களிடம் வழங்க வேண்டும் என்று கூறி தேர்வு மைய அலுவலர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.
அதற்கு அலுவலர்கள் நகல் எடுத்து கொடுத்த காரணத்தால், அதனை விடைத்தாளுடன் இணைக்க வேண்டி உள்ளது. எனவே அதனை உங்களிடம் தர முடியாது என்று கூறினர். எனவே பெற்றோர்கள் பள்ளி முன்பு அமர்ந்து கொண்டு போராட்டம் நடத்தி னர். மாவட்டத்தில் மொத்தம் 11 ஆயிரத்து 800 பேரில் 11 ஆயிரத்து 341 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 459 பேர் தேர்வு எழுத வரவில்லை என்று அதிகாரிகள் தெர்வித்தனர்.

Related Tags :
Next Story