தேர்வு கடினமாக இருந்ததாக கூறியதால் அதிர்ச்சி: மகளை நீட் தேர்வுக்கு அழைத்துச்சென்ற சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் சாவு
நீட் தேர்வு கடினமாக இருந்ததாக மகள் கூறியதால் அதிர்ச்சியடைந்த லாரி உரிமையாளர் மாரடைப்பால் இறந்து போனார்.
சிங்கம்புணரி,
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வடக்குத்தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 49). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்துவந்தார். இவருடைய மனைவி நர்மதா. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் இளைய மகள் தேவி ஐஸ்வர்யா(17). இவர் சிங்கம்புணரியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். மேலும் நீட் தேர்வுக்கும் விண்ணப்பித்து அதற்கு தயாராகி வந்தார். இதற்கிடையில் நேற்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. தேவி ஐஸ்வர்யாவுக்கு நீட் தேர்விற்கான மையம் மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் ஒதுக்கப்பட்டிருந்தது.
நேந்று அதிகாலையிலேயே தேர்வு எழுதுவதற்காக தேவி ஐஸ்வர்யா, தனது தந்தையுடன் பஸ்சில் சென்றுள்ளார். பின்னர் மதியம் தேர்வு முடிந்து வெளியே வந்த தனது மகளிடம் தேர்வு குறித்து கண்ணன் கேட்டுள்ளார். அதற்கு, தேர்வு மிகவும் கடினமாக இருந்தாக தேவி ஐஸ்வர்யா கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த கண்ணன் தேர்வு மைய கல்லூரி முன்பு மயங்கி விழுந்தார். இதனால் அந்த மாணவி செய்வதறியாது திகைத்தார்.
பின்னர் அவர் அருகில் நின்றிருந்த ஆட்டோவை அழைத்து, அதில் தனது தந்தையை ஏற்றிக்கொண்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு கண்ணனை பரிசோதனை செய்த டாக்டர்கள், மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கும்படி வற்புறுத்தினர்.
பின்னர் அங்கிருந்து தனது தந்தையை அந்த மாணவி மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு கண்ணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகவும் கூறினர். தன்னந்தனியாக போராடி தனது தந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்தும் அவர் இறந்துபோனதால் தேவி ஐஸ்வர்யா கதறி அழுதார். பின்னர் குடும்பத்தினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து கண்ணனின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

Related Tags :
Next Story