கூடலூர் அருகே மரங்களை வெட்டி கடத்த முயற்சி; லாரி பறிமுதல்
கூடலூர் அருகே மரங் களை வெட்டி கடத்துவதற்கு பயன்படுத்திய லாரியை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கூடலூர்,
கூடலூர், பந்தலூர் தாலுகா வனம் மற்றும் தனியார் நிலங்களில் ரோஸ்வுட், அயனி பலா, தேக்கு உள்பட விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. இதுதவிர பலா, நாவல் உள்பட காட்டு மரங்களும் உள்ளன. இந்த நிலையில் தனியார் நிலங்களில் உள்ள மரங்களை அனுமதி இன்றி வெட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தடையை மீறி அதிகளவு மரங்கள் வெட்டி கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்து உள்ளது.
இதேபோல் ஆபத்தான மரங்களை வெட்ட வருவாய் துறையினரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். உரிய தணிக்கைக்கு பிறகு வருவாய் துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர்.
கூடலூர் அருகே புளியாம்பாரா பகுதியில் மரங்கள் வெட்டி கடத்த முயற்சி நடைபெறுவதாக கூடலூர் தாசில்தார் ரவிச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது பலா உள்பட பலவகை மரங்களை எந்தவித அனுமதியும் இன்றி வெட்டி கடத்துவதற்காக லாரியில் சிலர் ஏற்றி கொண்டிருந்தனர். வருவாய் துறையினர் வருவதை அறிந்த மரக்கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதைத்தொடர்ந்து 22 மரங்கள் மற்றும் அதனை கடத்துவதற்கு பயன்படுத்திய லாரியை வருவாய் துறையினர் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகம் முன்பு கொண்டு வந்து நிறுத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, பறிமுதல் செய்த மரங்களின் மதிப்பை வனத்துறையினரிடம் இருந்து பெறப்பட்டு அபராத தொகை நிர்ணயிக்கப்படும். அதன்பின்னர் அபராத தொகையை செலுத்தினால் லாரி விடுவிக்கப்படும் என்றனர்.

Related Tags :
Next Story