திருப்பூரில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
திருப்பூரில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அந்த காரில் பயணம் செய்த பனியன் நிறுவன உரிமையாளர் மற்றும் அவருடைய 2 மகன்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்கள்.
திருப்பூர்,
திருப்பூர் ஓடக்காடு பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது 45). இவர் அந்த பகுதியில் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை தனது மகன் களான உதயகுமார்(17), ஜீவானந்தம்(15) ஆகியோருடன் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டார்.
காரை சம்பத்குமார் ஓட்டிச்சென்றார். மகன்கள் 2 பேரும் காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தனர். காலை 10.30 மணி அளவில் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் சந்தைப்பேட்டை அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, காரின் முன்பக்கத்தில் இருந்து திடீரென்று புகை வெளியேறியது. இதை பார்த்த சம்பத்குமார் உடனடியாக காரை நிறுத்தி விட்டு 2 மகன்களுடன் கீழே இறங்கினார்.
அதற்குள் காரின் முன்பகுதியில் தீப்பிடித்தது. பின்னர் அருகில் இருந்தவர்கள் துணையுடன் காரில் பிடித்த தீயை அணைக்க சம்பத்குமார் முயன்றார். இருப்பினும் தீ காருக்குள் வேகமாக பரவியது. உடனடியாக இதுகுறித்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அதிகாரி சண்முகம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
காரில் தீப்பற்றி எரிந்தபோது அங்கிருந்த வாகன ஓட்டிகள் தங்கள் செல்போனில் படம் பிடிப்பதிலேயே ஆர்வத்தை காட்டினார்கள். காரில் பொருத்தப்பட்டு இருந்த கியாஸ் கசிந்து இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காரில் தீப்பற்றியதும் உடனடியாக 3 பேரும் கீழே இறங்கி விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் பல்லடம் ரோட்டில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story