காவிரி பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடையும் - வேல்முருகன் பேட்டி
காவிரி பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று விழுப்புரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.
விழுப்புரம்,
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்டம் வருகிற 18-ந்தேதி மாலை விழுப்புரம் நகராட்சி திடலில் நடக்கிறது. இந்த கூட்டம் நடைபெறும் இடத்தை நேற்று முன்தினம் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் வேல்முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காவிரி பிரச்சினையில் துரோகம் செய்த மத்திய அரசு, தற்போது ‘நீட்’ தேர்விலும் துரோகம் செய்துள்ளது. ராஜஸ்தான், கேரளா போன்ற வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைத்து மாணவ- மாணவிகளை அலைக்கழிப்பு செய்துள்ளது.
இதனை கண்டித்து தென்இந்திய சி.பி.எஸ்.இ. அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். இதன் விளைவாக தேர்வு எழுதுபவர்களுக்கு ரெயில் கட்டணம் மற்றும் செலவுத்தொகை வழங்குவதாக அரசு அறிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டோம்.
தற்போது கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு தொடர்ந்து காவிரி பிரச்சினையில் துரோகம் செய்து வருகிறது. இனிமேலும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். இந்த பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான எங்களின் போராட்டம் மேலும் தீவிரமடையும். காவிரி நீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் மனுநீதி நாளன்று விவசாயிகளின் ஆடு, மாடு, டிராக்டர்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story