திருச்சியில் டென்னிஸ் போட்டி 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடக்கிறது
திருச்சியில் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான டென்னிஸ் போட்டி வருகிற 17-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
திருச்சி,
இது தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சியில் முதல் முறையாக டென்னிஸ் போட்டிகள் மாவட்ட நிர்வாகம், மாநகரக் காவல் துறை மற்றும் டென்னிஸ் விளையாட்டு ஆர்வலர்களால் இணைந்து நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகள் வருகிற 17-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள செயற்கை இழை டென்னிஸ் மின்னொளி மைதானத்தில் நடத்தப்படும். 12, 14 மற்றும் 16 வயதிற்குட்பட்ட ஆண், பெண் விளையாட்டு வீரர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
போட்டியில் வெற்றிபெறும் டென்னிஸ் வீரர்களுக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் நான்காம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் கால் இறுதியில் பங்கு பெறுவோருக்கு ரூ.1,000 என தனித்தனி பிரிவுகளில் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
போட்டியில் கலந்துகொள்ளும் டென்னிஸ் வீரர்கள் வயதுச் சான்றிதழ் பெற்று வருதல் வேண்டும். வயதுச் சான்றிதழ் பெற்று வராத மாணவ, மாணவிகள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். 12 வயதிற்கு உட்பட்டவர்கள் 1.1.2006 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ, 14 வயதிற்கு உட்பட்டவர்கள் 1.1.2004 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ, 16 வயதிற்கு உட்பட்டவர்கள் 1.1.2002 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு குறைந்த செலவில் தங்கும் இடம், விடுதி வசதி ஏற்பாடு செய்து தரப்படும்.
போட்டியில் பங்குகொள் பவர்கள் நுழைவுக் கட்டணமாக ரூ. 250 செலுத்தி தங்கள் பெயர்களை முன்பதிவு செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நுழைவுக் கட்டணத்தை 17-ந்தேதி காலை திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் வந்து நேரடியாக செலுத்தலாம். போட்டியில் கலந்து கொள்பவர்கள் 15-ந்தேதி பிற்பகல் 1 மணிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாதவர்கள் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story