திருச்சி மாவட்டத்தில் ஆய்வக உதவியாளர் பணிக்கான போட்டித்தேர்வை 7 ஆயிரத்து 354 பேர் எழுதினர்


திருச்சி மாவட்டத்தில் ஆய்வக உதவியாளர் பணிக்கான போட்டித்தேர்வை 7 ஆயிரத்து 354 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 7 May 2018 4:15 AM IST (Updated: 7 May 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் ஆய்வக உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வை 7 ஆயிரத்து 354 பேர் எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 5,845 பேர் தேர்வு எழுத வரவில்லை.

திருச்சி,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆய்வக உதவியாளர் பணிக்கான போட்டித்தேர்வு தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் இந்த தேர்வினை எழுத 13 ஆயிரத்து 199 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். அவர்கள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக 31 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த மையங்களில் 7 ஆயிரத்து 354 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 5 ஆயிரத்து 845 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு மையங்களை கண்காணிக்்க 43 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். போட்டித் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 10 இயங்கு குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இக்குழுவிற்கு உதவியாக துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு அதிகாரி, ஒரு முதுநிலை வருவாய் ஆய்வாளர், ஆயுதம் ஏந்திய போலீசார் மற்றும் ஒரு அலுவலக உதவியாளரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கலெக்டர் ஆய்வு

அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வினை பதிவு செய்திட 31 வீடியோ கிராபர்களும் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். தேர்வு எழுத வந்தவர்கள் செல்போன் உள்ளிட்ட எந்தவித மின்னணு சாதனங்களும் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. திருச்சி பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, பாலக்கரை அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் ராஜாமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

Next Story