பஸ்நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம் போலீசார் விசாரணை
பெரம்பலூர் புதிய பஸ்நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம் போலீசார் விசாரணை.
பெரம்பலூர்,
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவக வாசலில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று காலை இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திக்கு வந்து இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இறந்தவர் மஞ்சள் நிற ஆடையில், கருப்பு நிறத்தில் கோடு போட்ட அரைக்கை சட்டையும், வெள்ளை நிறத்தில் வேட்டியும் அணிந்திருந்தார்.

Related Tags :
Next Story