திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,900 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு 25 பேர் மீது வழக்கு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,900 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. இதுதொடர்பாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் மேற்பார்வையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மற்றும் சட்டம்- ஒழுங்குப் பிரிவு போலீசார் நேற்று சாராய ஒழிப்பு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது போளூர் செண்பகத்தோப்பு பகுதியில் 2 இடத்தில் தனித்தனியாக மறைத்து வைக்கப்பட்டு இருந்த தலா 200 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் இருந்து 100 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் வேட்டவலம் மதுராம்பட்டு பகுதியில் திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மறைத்து வைக்கப்பட்டு இருந்த 1,500 லிட்டர் சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.
இதுகுறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய ஒழிப்பு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற தீவிர சோதனையில் 1,900 லிட்டர் சாராய ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. அத்துடன் 100 கிலோ வெல்லமும், 37 பாட்டில் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இந்த சோதனையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் மது விலக்கு போலீசார் மூலம் 13 பேர் மீதும், சட்டம்- ஒழுங்குப் பிரிவு போலீசார் மூலம் 12 பேர் மீதும் என 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது போன்று சாராய ஒழிப்பு நடவடிக்கை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும். மேலும் சாராய வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story