600-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்ற தேசிய விழித்திரை அறுவை சிகிச்சை மாநாடு


600-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்ற தேசிய விழித்திரை அறுவை சிகிச்சை மாநாடு
x
தினத்தந்தி 7 May 2018 4:00 AM IST (Updated: 7 May 2018 3:35 AM IST)
t-max-icont-min-icon

தேசிய விழித்திரை அறுவை சிகிச்சை தொடர்பான மாநாடு சென்னையில் நடந்தது. இதில் 600-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்றனர்.

சென்னை,

விழித்திரை கோளாறு சிகிச்சை மேலாண்மையில் சமீபத்திய நவீன அறுவை சிகிச்சை தொழில்நுட்பங்களை கொண்டு முன்னிலை வகிக்க விரும்பும் கண் அறுவை சிகிச்சை டாக்டர்களுக்காக அர்ப்பணிக்கும் நோக்குடன் ‘ரெட்டிகான்’ மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில், விழித்திரை அறுவை சிகிச்சை குறித்த இந்தியாவின் மிகப்பெரிய வருடாந்திர மாநாட்டின் (ரெட்டிகான்) எட்டாவது பதிப்பு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மாநாட்டை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.

சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் அமர் அகர்வால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட விழித்திரை அறுவை சிகிச்சை டாக்டர்கள் பங்கேற்றனர்.

விழிப்புள்ளி துறை அறுவை சிகிச்சை, நீரிழிவு நோய் விழித்திரை நோய் சிகிச்சை மற்றும் ஐ.ஓ.எல். டிராப் உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சைகளை டாக்டர்கள் நிலேஷ் கஞ்சானி, அடுல் குமார், அடுல் தவான், மனோஜ் கத்ரி ஆகியோர் காண்பித்தனர்.

விட்ரியோரெட்டினல் அறுவை சிகிச்சையில் திருப்புமுனை குறித்து டாக்டர் அமர் அகர்வால், வண்ண விஸ்கோ எலாஸ்டிக்ஸ் பயன்படுத்தி விழிப்புள்ளி துளை பழுதுபார்ப்பு அறுவை சிகிச்சைக்கான புதிய தொழில்நுட்பம் குறித்து டாக்டர் தவான் ஆகியோர் உரையாற்றினர்.

Next Story