அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு
அடையாறில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு பணம் மற்றும் பொருட்களை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அடையாறு,
அடையாறு கஸ்தூரிபாய் நகர் 3-வது குறுக்கு தெருவில் குருமூர்த்தி (வயது 40) என்பவர் ஆர்கானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அதே வளாகத்தில் சக்தி (50) என்பவர் டெய்லரிங் கடையும், செந்தில் (40) என்பவர் இசைக்கருவிகள் விற்பனை செய்யும் கடையும் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் 3 பேரும் கடைகளை திறக்க வந்தனர். அப்போது 3 கடைகளின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்களின் கடைகளுக்குள் சென்று பார்த்தனர்.
அப்போது, குருமூர்த்தியின் கடையில், ரூ.1 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் மதிப்பிலான செம்பு, வெள்ளி உள்ளிட்ட பொருட்களும், சக்தியின் கடையில் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 5 துணி பண்டல்களும், செந்திலின் கடையில் இருந்து ரூ.10 ஆயிரமும், ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 5 கிட்டார் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரும் அடையாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில் முகமூடி அணிந்த மர்மநபர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story