புதர் மண்டி கிடக்கும் குளத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
தத்தனூர் ஊராட்சியில் பாசிகள் படிந்து குப்பை கழிவுகளாக புதர் மண்டி கிடக்கும் குளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையை அடுத்த தத்தனூர் ஊராட்சியில் மிகப்பெரிய குளம் உள்ளது. தற்போது இந்த குளம் பாசிகள் படிந்து புதர் மண்டி குப்பைகள் இருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. நீண்ட நாட்களாக உள்ள இந்த பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புதர் மண்டி காணப்படும் செடி, கொடிகளால் கொசுக்கள் மூலம் மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது. இங்கு உள்ள இந்த பழமையான குளத்தில் புதர் மண்டி கிடக்கும் செடி, கொடிகளை அகற்றி குளத்தை ஆழப்படுத்தி கரையை பலப்படுத்தினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
இதனால் இங்கு குடியிருக்கும் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கும்.
குறிப்பாக பிள்ளையார் கோவில் தெருவில் இருக்கும் 150 பேருக்கு ஒரே ஒரு கிணறு மட்டும்தான் உள்ளது. இந்த கிணற்று நீரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஏற்றி பிறகு குழாய் மூலம் வினியோகிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே குளத்தில் குப்பை கழிவுகளை கொட்டாமலும் பாசிகளையும் புதர்களையும் அகற்றி குளத்தை பாதுகாத்தால் இந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை இருக்காது.
இந்த பிரச்சினை இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிப்பதோடு சரி. இது நாள் வரை எந்த பணியும் நடைபெறவில்லை.
பாசிகள் படிந்து புதர் மண்டி காணப்படும் குளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story