சிதம்பரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
ரேஷன் கடை கட்டிடம் கட்டித்தரக்கோரி சிதம்பரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டரிடம் ரேஷன் கார்டை ஒப்படைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம்,
சிதம்பரம் அருகே உள்ள பொன்னங்கோவில் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் நேற்று மதியம் 12.30 மணி அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு மாதவன், கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன் ஆகியோர் தலைமையில் சிதம்பரம் தாலுகா அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் தங்கள் கிராமத்தில் ரேஷன் கடை கட்டிடம் கட்ட வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பியபடி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்கள் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் தண்டபாணியிடம் ரேஷன் கார்டை ஒப்படைக்க முயன்றனர். ரேஷன் கார்டை வாங்க மறுத்த கலெக்டர், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது கிராம மக்கள், தங்கள் பகுதியில் ரேஷன் கடை இல்லாததால், 2 கி.மீ. தொலைவில் உள்ள பரதூர் கிராமத்துக்கு நடந்து சென்று அங்குள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் அங்கு முறையாக ரேஷன் பொருட்கள் வழங்குவதில்லை. இதனால் எங்கள் பகுதியில் ரேஷன் கடை கட்டிடம் கட்டி, முறையாக பொருட்கள் வழங்க வேண்டும் என்று கூறி கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் தண்டபாணி, 10 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதை ஏற்ற கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story