தர்மபுரி அருகே பெட்ரோலிய சுத்திகரிப்பு கிடங்கு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
தர்மபுரி அருகே பெட்ரோலிய சுத்திகரிப்பு கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் சிவாடி கிராம பகுதியில் பெட்ரோலிய நிறுவனத்தின் சுத்திகரிப்பு கிடங்கு அமைக்க நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இந்த பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அந்த பகுதியில் உள்ள நில உரிமையாளர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.
இதையடுத்து நில உரிமையாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் நேற்று மாலை தர்மபுரி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த கலெக்டர் மலர்விழி அங்கு வந்தார். அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டவர்களை தனித்தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் அனைவரையும் ஒன்றாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் பேச்சுவார்த்தையில் பங்கேற்கமாட்டோம் என்றும் தெரிவித்தனர்.
இதன்காரணமாக பேச்சுவார்த்தையை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்த வந்திருந்த கலெக்டர் மலர்விழி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். உதவி கலெக்டர் ராமமூர்த்தி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு அங்கு திரண்டிருந்த கிராம மக்கள்பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விளைநிலங்களையும் சுற்றுப்புற சூழலையும் பாதிக்கும் வகையில் எண்ணெய் கிடங்கு அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். விவசாயிகள், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அப்போது கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story