நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ம.தி.மு.க. தொண்டர் தற்கொலை முயற்சி
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, ம.தி.மு.க. தொண்டர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவர் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார்.
ஆவுடையார்கோவில்,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகில் உள்ள முனியன் வயல் பகுதியை சேர்ந்தவர் ஜகுபர் அலி (வயது 50). இவருக்கு திருமணமாகி சகர்பானு என்ற மனைவியும், தலால் ஆஸ்மி, ஜமீனாபானு என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர் 30 ஆண்டுகளாக ம.தி.மு.க.வின் தீவிர தொண்டராக இருக்கிறார்.
மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த பகுதியில் நடந்த பல போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலை தனது குடும்பத்தினரிடம் நீட் தேர்வு குளறுபடி குறித்து மனமுடைந்து கவலையுடன் பேசி வந்துள்ளார்.
இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நேற்று காலை ஜகுபர் அலி தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் கட்சி துண்டை முறுக்கி கயிறாக கட்டி தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஜகுபர் அலி ம.தி.மு.க.வில் தொடக்கக் காலத்திலிருந்து பணியாற்றும் உறுதியான தொண்டர் ஆவார். அவர் உயிர் பிழைக்க வேண்டுமே என்ற ஏக்கத்தோடு, தமிழகத்திலுள்ள இளைஞர்களை குறிப்பாக ம.தி.மு.க. தொண்டர்களே உயிரைப் போக்கிக் கொள்ள முயலாதீர்கள், உங்கள் குடும்பத்தினரைத் துயரப் படுகுழியில் தள்ளாதீர்கள் என்று உடைந்துபோன உள்ளத்தோடு இருகரம் கூப்பி மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story