ஜாக்டோ-ஜியோ முற்றுகை போராட்டத்துக்கு புறப்பட்ட வேன்கள் பறிமுதல்


ஜாக்டோ-ஜியோ முற்றுகை போராட்டத்துக்கு புறப்பட்ட வேன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 8 May 2018 4:00 AM IST (Updated: 8 May 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

தொகுப்பூதிய முறையை ரத்து செய்து காலமுறை ஊதியத்தை முறைபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துகின்றனர்.

திருமானூர்,

அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதிய முறையை ரத்து செய்து காலமுறை ஊதியத்தை முறைபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள அரியலூர் மாவட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பஞ்சாபிகேசன் தலைமையில், 3 வேன்களில் நேற்று புறப்பட அந்த அமைப்பினர் தயாராக இருந்தனர். இதனையறிந்த திருமானூர் போலீசார் வேன்களின் ஓட்டுனர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், சென்னை முற்றுகை போராட்டத்துக்கு செல்வது தெரியவந்தது. இதனையடுத்து 3 வேன்களையும் பறிமுதல் செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story