நொய்யல் ஆற்றில் கழிவுநீரை திறந்து விடும் சலவை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகள் மனு
நொய்யல் ஆற்றில் கழிவுநீரை திறந்து விடும் சலவை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் அணைப்பாளையம் ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஒரு மனுகொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
அணைப்பாளையம் கிராமத்தில் நொய்யல் கரையோரம் விவசாயம் செய்து வருகிறோம். தற்போது திருப்பூர் பகுதியில் மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றிலும், அதன் தடுப்பணை ராஜ வாய்க்கால்களிலும் தண்ணீர் கணிசமாக வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அணைப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வருகிற சலவை நிறுவனங்கள் நொய்யல் ஆற்றிலும், தடுப்பணை பகுதிகளிலும் ராஜ வாய்க்கால்களிலும் கழிவுநீரை திறந்து விடுகின்றன. எனவே கழிவுநீரை திறந்து விடும் நிறுவனங்களை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், விவசாயிகளை மிரட்டுவது, கொலை மிரட்டல் விடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
பல்லடம் அருகே உள்ள கருப்பகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் “ கருப்ப கவுண்டம்பாளையத்தில் உள்ள பள்ளிக்கு அருகே உள்ள பாறைக்குழியில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே பள்ளி அருகே உள்ள பாறைக்குழியில் குப்பை கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருப்பராயன் கோவில் பின்புறம் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியிருந்தனர்.
பொங்குபாளையத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கொடுத்த மனுவில் “பொங்குபாளையம் ஊராட்சியை சேர்ந்த பொங்குபாளையம், காளம்பாளையம், பள்ளிபாளையம், மாரப்பம்பாளையம் புதூர், பரம சிவம்பாளையம் உள்பட பகுதிகளுக்கு 3-வது திட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலம் தாழ்த்தும் பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்” என்றிருந்தனர்.

Related Tags :
Next Story