தாயின் கையில் இருந்து தவறி விழுந்த குழந்தை சாவு


தாயின் கையில் இருந்து தவறி விழுந்த குழந்தை சாவு
x
தினத்தந்தி 8 May 2018 5:20 AM IST (Updated: 8 May 2018 5:20 AM IST)
t-max-icont-min-icon

மாடிப்படியில் நடந்து வந்தபோது, ஹீல்ஸ் செருப்பால் நிலை தடுமாறி தாயின் கையில் இருந்து தவறி கீழே விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

அம்பர்நாத்,

தானே மாவட்டம் உல்லாஸ்நகர் தோபிகாட் பகுதியை சேர்ந்தவர் சேக். இவரது மனைவி பெமிடா (வயது23). இந்த தம்பதிக்கு முகமது என்ற 6 மாத ஆண் குழந்தை இருந்தது. பெமிடா நேற்று முன்தினம் கல்யாண், ராம்பாக் பகுதியில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார். இதில், திருமணம் முடிந்து பெமிடா குழந்தையுடன் 2-வது மாடியில் இருந்து படியில் இறங்கி கீழே வந்து கொண்டு இருந்தார்.

இதில், அவர் அணிந்து இருந்த ஹை ஹீல்ஸ் செருப் பால் நிலை தடுமாறினார். அப்போது அவர் கையில் இருந்த குழந்தை தவறி 2-வது மாடியில் இருந்து முதல் தளத்தில் விழுந்து படுகாயமடைந்தது.

இதைப்பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்தார். இந்தநிலையில் திருமண வீட்டில் இருந்தவர்கள் படுகாயமடைந்த குழந்தையை மீட்டு அருகில் உள்ள ஆஸ் பத்திரிக்கு தூக்கிச்சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

இந்த சம்பவம் குறித்து கல்யாண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாயின் கையில் இருந்து குழந்தை தவறி விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story