கிணற்றில் மர்மமான முறையில் இறந்துகிடந்த வாலிபர்
ஆம்பூர் அருகே கிணற்றில் மர்மமான முறையில் இறந்துகிடந்த வாலிபர் கொலைசெய்து வீசியதாக கலெக்டர் அலுவலகத்தில் மனைவி கதறல்.
ஆம்பூர்,
ஆம்பூர் அருகே கிணற்றில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரை அடித்து கொலைசெய்து பிணத்தை கிணற்றில் வீசியதாக அவருடைய மனைவி, கலெக்டர் அலுவலகத்தில் புகார்மனுகொடுத்தார். அப்போது அவர் குழந்தைகளுடன் கதறி அழுதார்.
ஆம்பூரை அடுத்த பெரியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவருடைய மகன் ஆனந்தகுமார் (வயது 26). செல்போன் சர்வீஸ் கடை வைத்திருந்தார். இவருடைய மனைவி சந்தியா. இவர்களுக்கு மதுஸ்ரீ (3), யுவஸ்ரீ (1½) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சந்தியாவின் தம்பி விக்னேஷ் என்பவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஒருபெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு காரணமாக ஆனந்தகுமாருக்கும், சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற ஆனந்தகுமார் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை தேடியபோது நாச்சார்குப்பம் கிராமத்தின் அருகில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக கிடந்தார். அவருடைய மோட்டார்சைக்கிளும் கிணற்றிலேயே கிடந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆம்பூர் தாலுகா போலீசார் சென்று ஆனந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மர்மச்சாவு என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றுகாலை வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு ஆனந்தகுமாரின் மனைவி சந்தியா தனது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் வந்தார். அங்கு தனது கணவர் ஆனந்தகுமாரை சிலர் அடித்துக்கொலை செய்து கிணற்றில் பிணத்தை வீசிவிட்டனர். அவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று கதறி அழுதார். அவருடன் வந்திருந்த உறவினர்கள் தரையில் படுத்து மண்டியிட்டு அழுதுபுரண்டனர்.
உடனடியாக அங்குவந்த அதிகாரிகள் அவர்களை குறைதீர்வுகூட்டம் நடந்த இடத்திற்கு அழைத்துச்சென்றனர். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் ஆம்பூர் போலீஸ்நிலையத்திற்கு செல்லுமாறும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஆனந்தகுமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக வைக்கப் பட்டிருந்தது. ஆனால் ஆனந்தகுமார் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் அதுவரை உடலை வாங்க மாட்டோம் என அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் மறுத்து மருத்துவ மனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை என கண்டறியப்பட்டால் அது குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

Related Tags :
Next Story