அலுமினிய நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை


அலுமினிய நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை
x
தினத்தந்தி 8 May 2018 1:13 PM IST (Updated: 8 May 2018 1:13 PM IST)
t-max-icont-min-icon

தேசிய அலுமினிய நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு 115 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-

தேசிய அலுமினிய நிறுவனம் சுருக்கமாக நால்கோ (NALCO) என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் பட்டதாரி என்ஜினீயர்களை, கேட் தேர்வின் அடிப்படையில் பணியமர்த்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 115 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மெக்கானிக்கல் பிரிவுக்கு 54 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவுக்கு 32 இடங்களும், மெட்டலர்ஜி பிரிவுக்கு 18 இடங்களும், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 5 இடங்களும், இன்ஸ்ட்ருமென்டேசன் பிரிவில் 6 இடங்களும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 60 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 30 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 17 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 8 இடங்களும் உள்ளன. மாற்றுத் திறனாளி களுக்கு 15 இடங்கள் ஒதுக்கப்படுகிறது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு:-

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 22-5-2018-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், மெட்டலர்ஜி போன்ற என்ஜினீயரிங் பிரிவுகளில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் கேட் -2018 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப் படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். கேட் மதிப்பெண், நேர் காணல் மதிப்பெண், பட்டப்படிப்பு மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை:


விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க 22-5-2018-ந் தேதி கடைசி நாளாகும்.

விண்ணப்பிக்கவும், மேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.nalcoindia.com என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும். 

Next Story