பணமதிப்பு குறைப்பு


பணமதிப்பு குறைப்பு
x
தினத்தந்தி 8 May 2018 3:21 PM IST (Updated: 8 May 2018 3:21 PM IST)
t-max-icont-min-icon

உலகச் சந்தையிலுள்ள பணங்களின் மதிப்புகளுக்கு ஏற்ப நம் பணத்தின் மதிப்பை குறைப்பதற்கு பண மதிப்பு குறைப்பு என்று பெயர்.

பணமதிப்பு குறைப்பு செய்வதன் மூலம் ஏற்றுமதி பெருகி இறக்குமதி குறைய வாய்ப்பு ஏற்படுகிறது.

பாதக வணிகச் சமநிலையை சீர் செய்து, சாதக வணிகச் சமநிலையை ஏற்படுத்த பண மதிப்பு குறைப்பு செய்யப்படுகிறது.

இந்தியாவில் இதற்கு முன்பு 4 முறை பணமதிப்பு குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 1949 (30.5 சதவீதம்), ஜூன் 1966 (57 சதவீதம்), ஜூலை 1, 1991 (9 சதவீதம்), ஜூலை 3, 1991 (11 சதவீதம்) ஆகிய ஆண்டுகளில் இந்தியாவில் பணமதிப்பு குறைப்பு செய்யப்பட்டது.

இந்தியாவில் முதன்முறையாக பணமதிப்பு குறைப்பு செய்யப்பட்டபோது நிதி அமைச்சராக இருந்தவர் ஜான் மத்தாய் (1949).

இந்தியாவில் இரண்டாவது முறையாக பணமதிப்பு குறைப்பு செய்யப்பட்ட போது நிதி அமைச்சராக இருந்தவர் சச்சிந்தர சவுத்திரி (1966).

இந்தியாவில் மூன்றாவது மற்றும் நான்காவது முறையாக பணமதிப்பு குறைப்பு செய்யப்பட்டபோது நிதி அமைச்சராக இருந்தவர் மன்மோகன்சிங் (1991).

பணப்புழக்க ஒழிப்பு என்பது கள்ளச்சந்தையை தடுப்பதற்காக அதிக மதிப்புள்ள பணத்தை பணப்புழக்கத்திலிருந்து வாபஸ் பெறுவதாகும். சமீபத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டன. அதற்கு முன்பாக 1946 மற்றும் 1978-ல் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. 

Next Story