தீயணைப்பு படைவீரர்களுக்கு புத்தாக்க பயிற்சி
ஆரணியில் தீயணைப்பு படைவீரர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.
ஆரணி
ஆரணி தீயணைப்பு நிலையத்தில் ஆரணி, பெரணமல்லூர், சேத்துப்பட்டு, செய்யாறு, வந்தவாசி, ஜவ்வாதுமலை ஆகிய தீயணைப்பு நிலைய படைவீரர்களுக்கு மனஉறுதி, உடல் உறுதி, யோகா, மனவள கலை, துறை சார்ந்த சிறப்பு கருவி இயக்க பயிற்சி என புத்தாக்க பயிற்சி நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் எஸ்.குமார் தலைமை தாங்கினார். ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் பேச்சுக்காளை பயிற்சி அளித்தார்.
தொடர்ந்து தீயணைப்பு மீட்புப் பணித்துறை படைவீரர்களுக்கு குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது.
புத்தாக்க பயிற்சியில் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் திருநாவுக்கரசு, திருமுருகன், சேகர், முகமதுஅயூர்கான் மற்றும் 70 படைவீரர்கள் கலந்துகொண்டனர்.
மீதமுள்ள படைவீரர்களுக்கு வருகிற 15-ந் தேதி புத்தாக்க பயிற்சி நடைபெறும் என்று மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் தெரிவித்தார்.
Related Tags :
Next Story