பெரம்பலூரில் மின்னல் தாக்கி பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பலி
பெரம்பலூரில் மின்னல் தாக்கி பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மங்களமேடு,
பெரம்பலூர் மாவட்டம், ஒகளூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மனைவி செந்தமிழ்ச்செல்வி (வயது 53). இவர் தனது மாடுகளை அப்பகுதியில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். பின்னர் மாலையில் மேய்ச்சலுக்கு விட்ட மாடுகளை வீட்டிற்கு ஓட்டிவந்தார்.
அப்போது அப்பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் செந்தமிழ்ச்செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சேகர் மங்களமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, செந்தமிழ்ச்செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், மருவத்தூர் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மகன் அரவிந்த் (13) கொளத்தூர் அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் கொளத்தூர் ஏரிக்கரை அரச மரத்தடியில் அரவிந்த் மழைக்காக ஒதுங்கினான். அப்போது மின்னல் தாக்கியதில் அரவிந்த் படுகாயமடைந்தான். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அரவிந்தை மீட்டு சிகிச்சைக்காக கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அரவிந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story