மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் சரிபார்ப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
பெரம்பலூரில் இருப்பில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் சரிபார்ப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு.
பெரம்பலூர்,
பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளின் இருப்பை உறுதிசெய்யும் வகையில், மேற்கொள்ளப்பட்டு வரும் சரிபார்ப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெரம்பலூர் மாவட்டத்தில், உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டுக்கருவிகளின் இருப்பை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கும் வகையிலான 100 சதவீதம் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 764 கட்டுப்பாட்டு கருவிகளும், 39 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இக்கருவிகளின் இருப்பை உறுதிசெய்யும் வகையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள பிரத்யேக செயலி மூலம் கருவிகளின் பின்புறம் உள்ள பார்கோடு ஸ்கேன் செய்யப்படுகின்றது. உடனடியாக அந்தக்கருவியின் அடையாள எண் மற்றும் எந்த மாவட்டத்தில் எந்த இடத்தில் உள்ள வைப்பறையில் கருவிகள் வைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் உடனடியாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சென்று சேரும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் அனைத்து கருவிகளும் சரிபார்க்கப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறினார். இந்நிகழ்வின்போது வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், பெரம்பலூர் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சிவா, வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story