மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், காவிரியில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. இந்த நிலையில் காவிரி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டது. இதையடுத்து வழக்கு வருகிற 14-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் காவிரிக்கான செயல் திட்டத்தை வழங்காமல் கால அவகாசம் கேட்ட மத்திய அரசை கண்டித்தும், வழக்கை தள்ளிவைத்ததை கண்டித்தும் திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர் நேற்று மாலை தலைமை தபால் நிலையம் முன்பு திரண்டனர். மேலும் அங்கிருந்து பி.எஸ்.என்.எல். அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.
ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் இந்திரஜித் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் திராவிடர் மணி, விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story