குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்
கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் கிராமத்திற்கு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சரிவர வினியோகிக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பரமத்தி வேலூர்,
கபிலர்மலை அருகே உள்ள இருக்கூரில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது கோடைகாலம் தொடங்கி அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
குறிப்பாக இருக்கூர் ஊராட்சி மன்றம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் மின் மோட்டாரை இயக்கும் பணியாளர் சரிவர பணியில் ஈடுபடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
சாலை மறியல்
இதுகுறித்து ஊராட்சி மன்ற எழுத்தரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பரமத்தி போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் மின் மோட்டாரை இயக்கும் பணியாளரை வேலையில் இருந்து நீக்குவதாக உறுதியளித்தால் மட்டுமே போராட்டம் விலக்கி கொள்ளப்படும் என பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்தனர். அதையடுத்து போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற எழுத்தர் உரிய நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story