கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 May 2018 4:00 AM IST (Updated: 9 May 2018 2:42 AM IST)
t-max-icont-min-icon

பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தி தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

எலச்சிபாளையம்,

பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தி தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பூபதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஆதிநாராயணன், துணைத்தலைவர் வேலாயுதம் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

2014-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தவில்லை, எனவே கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், 25.10.2017 அன்று மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பின்படி, பால் கொள்முதல் செய்யும் இடத்திலேயே தர நிர்ணயம் செய்யப்பட வேண்டும், கொள்முதல் செய்ய வரும் வாகனங்களில் இந்த கருவிகளை கொண்டு வர வேண்டும், 6 மாதத்திற்குள் இதனை அமல்படுத்த உத்தரவிட்டும், இதுவரை அமல்படுத்த வில்லை. உடனடியாக இதை அமல்படுத்த வேண்டும், கால்நடை தீவனங்களை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷம் எழுப்பினர். 

Next Story