வீட்டில் மாடித்தோட்டம் அமைக்க பெண்கள் முன்வரவேண்டும் - அமைச்சர் கமலக்கண்ணன் வேண்டுகோள்
இல்லத்தரசிகள் வீட்டில் மாடித்தோட்டம் அமைக்க முன்வர வேண்டுமென அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
புதுச்சேரி,
புதுவை அரசு வேளாண்துறை வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைப்பதற்கு வேண்டிய இடுபொருட்களான காய்கறி விதைகள், இயற்கை உரம், வளர்ப்பு பைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்றவை 75 சதவீத மானியத்தில் வழங்குகிறது.
அதன்படி எல்லைப்பிள்ளைச் சாவடியில் பயனாளிகளுக்கு மாடித்தோட்டம் அமைப்பதற்கு வேண்டிய உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார்.
அப்போது அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது:-
இன்றைய கால கட்டத்தில் நாம் உண்ணும் உணவுகளால் பெரும்பாலான நோய்கள் வரக்கூடும் என்ற அச்சம் அனைவரிடத்திலும் உள்ளது. வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் முழுமையாக தொலைக்காட்சிகளில் மூழ்கி உள்ளனர். இதனால் அவர்களுக்கு கண்பார்வை குறைபாடு உள்பட பல்வேறு நோய்கள் வரக்கூடும்.
எனவே இல்லத்தரசிகள் வீட்டில் மாடித்தோட்டம் அமைக்க முன்வரவேண்டும். இதன் மூலமாக அவர்களுக்கு மன அழுத்தம் குறையும். வீட்டில் மாடி தோட்டம் அமைத்து காய்கறிகளை உற்பத்தி செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story