கவர்னர் உத்தரவினை தொடர்ந்து இலவச அரிசியின் தரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
கவர்னர் உத்தரவினை தொடர்ந்து இலவச அரிசியின் தரத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
புதுச்சேரி,
புதுவையில் சிவப்பு நிற ரேஷன்கார்டுகளுக்கு 20 கிலோவும், மஞ்சள் நிற கார்டுகளுக்கு 10 கிலோவும் இலவச அரிசி வழங்க கவர்னர் கிரண்பெடி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்தார். இதையொட்டி அரிசியின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குனர் வல்லவன் வெளியிட்ட செய்திக்குறிப்பிலும், இலவச அரிசியின் தரம் குறித்து அதிகாரிகள் சான்றளித்த பின்னரே வினியோகம் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று புதுவை பகுதிகளில் உள்ள அரிசி ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட அரிசி 6 லாரிகளில் தட்டாஞ்சாவடி குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த அரிசியின் தரம் குறித்து இயக்குனர் வல்லவன் முன்னிலையில் உணவுப் பொருள் பாதுகாப்பு அதிகாரி தன்ராஜ் மற்றும் ஊழியர்கள் ஆய்வு செய்தனர். குறிப்பாக அரிசியின் நிறம், ஈரப்பதம், தரம், மணம் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டன. சில மூட்டைகளில் அரிசி மாதிரிகளையும் அதிகாரிகள் எடுத்துக்கொண்டனர். தர பரிசோதனை முடிந்தபின் ரேஷன் கடைகள் மூலம் விரைவில் பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட உள்ளது.

Related Tags :
Next Story