தானேயில் கழிவறைக்குள் புகுந்து சிறுமியை கற்பழித்தவர் கைது
தானேயில் கழிவறைக்குள் புகுந்து 8 வயது சிறுமியை கற்பழித்தவரை போலீசார் கைது செய்தனர்.
தானே,
தானேயில் கழிவறைக்குள் புகுந்து 8 வயது சிறுமியை கற்பழித்தவரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமி கற்பழிப்பு
தானே காபூர்பாவடி கோல்சேத் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் அங்குள்ள பொதுகழிவறைக்கு சென்றாள். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த ரமேஷ் விஜய்பகதூர் சிங் (வயது45) என்பவர் சிறுமியை பின் தொடர்ந்து சென்று, அவள் கழிவறைக்குள் சென்றதும் தானும் உள்ளே புகுந்து மின்விளக்கை அணைத்துவிட்டு அவளை வாயை பொத்தி கற்பழித்து உள்ளார்.
இதை கவனித்த அந்த பகுதியை சேர்ந்த சிறுமியின் உறவினர் ஒருவர் கழிவறைக்குள் நுழைந்து ரமேஷ் விஜய்பகதூர் சிங்கை தள்ளிவிட்டு சிறுமியை மீட்டு வெளியே கொண்டு வந்தார்.
கைது
தப்பியோட முயன்ற ரமேஷ் விஜய்பகதூர் சிங்கை கழிவறைக்குள் வைத்து பூட்டிவிட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த காபூர்பாவடி போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கழிவறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த ரமேஷ் விஜய்பகதூர் சிங்கை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story