நத்தம் பகுதிகளில் மாம்பழ சீசன் தொடக்கம்


நத்தம் பகுதிகளில் மாம்பழ சீசன் தொடக்கம்
x
தினத்தந்தி 9 May 2018 4:45 AM IST (Updated: 9 May 2018 4:39 AM IST)
t-max-icont-min-icon

நத்தம் பகுதிகளில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளது.

நத்தம்

நத்தம் பகுதிகளில் பரளி, வத்திப்பட்டி, லிங்கவாடி, காசம்பட்டி, உலுப்பகுடி, பட்டணம்பட்டி, புதுப்பட்டி, சமுத்திராபட்டி, முளையூர், மலையூர் மற்றும் செங்குளம் உள்ளிட்ட 100-க்கும் மேற் பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மா சாகு படி செய்யப்பட்டுள்ளது.

சேலத்துக்கு அடுத்தப்படி யாக நத்தம் பகுதிகளில் விளையும் மாம்பழம் பிரசித்தி பெற்றது. அதிக ருசியும், மணமும் நிறைந்ததாகும். இதுதவிர மருத்துவ குணமும் நிறைந்துள்ளது. இந்த மாம்பழங்களை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். வழக்கமாக மே மாதம் மாம்பழ சீசன் தொடங்குவது வழக்கம்.

கடந்த மார்ச் மாதம் பூக்கள் பூக்க தொடங்கியது. தற்போது இந்த மாதம் தொடக்கத்தில், விளைச்சல் பெற்று அறுவடை செய்யப்பட்டு வருகிறது. கடும் வறட்சிக்கு மத்தியில், அறு வடை பணி தொடங்கி விட்டது. சீசன் தொடங்கி யுள் ளதை கடைகளில் மாம்பழங் கள் விற்பனைக்கு வந்துள்ளது.

அதுமட்டுமன்றி இந்த மாம்பழங்கள் வெளிமாநிலங் களுக்கும் மொத்தமாக அனுப் பப்பட்டு வருகிறது. அதன்படி (ஒரு கிலோ) கல்லாமை ரகம் ரூ.10 முதல் ரூ.20 வரையிலும், பாலாமணி ரகம் ரூ.15 முதல் ரூ.30 வரையிலும், சப்பட்டை ரகம் ரூ.40 முதல் ரூ.50 வரையிலும், இமாம்பசந்து ரூ.80 முதல் ரூ.100 வரையிலும் விற்பனை ஆகிறது. இதேபோல் மாம்பழம் ரகம் சில்லரை விலையில் கிலோவிற்கு ரூ.20 முதல் ரூ.30 வரையிலும் விற்பனை செய்கின்றனர்.

இதுகுறித்து மா, தென்னை, புளி விவசாய பண்ணை தலைவர் வேம்பார்பட்டி கண்ணுமுகமது கூறும்போது, ‘கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விளைச்சல் பாதியாக குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மா விவசாயிகளை ஊக்குவிக்க அரசு முன்வர வேண்டும்’ என்றார்.

Next Story