அருப்புக்கோட்டையில் நிர்மலாதேவி வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி
அருப்புக்கோட்டையில் பேராசிரியை நிர்மலாதேவியின் வீட்டில் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது.
அருப்புக்கோட்டை,
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த குற்றச்சாட்டில் அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கடந்த மாதம் 16-ந் தேதி கைது செய்யப்பட்டார். அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டி காவியாநகரில் உள்ள வீட்டில் இருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தார்கள். அவர் தற்போது மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நிர்மலாதேவி கைது செய்யப்பட்டதும் அந்த வீடு பூட்டப்பட்டது. அதன்பின்னர் கடந்த 21-ந் தேதி இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி.போலீசார் வீட்டை திறந்து அங்குலம் அங்குலமாக சோதனை போட்டனர். அங்கிருந்த கம்ப்யூட்டர் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச்சென்றனர். அன்றைய தினம் கிராமநிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் வீடு பூட்டி சீல் வைக்கப்பட்டது.
அதன்பின்னர் 26-ந் தேதி சீல் பிரிக்கப்பட்டு வீட்டுச் சாவி நிர்மலாதேவியின் கணவர் சரவணபாண்டியனிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் நேற்றுமுன்தினம் வீட்டுக்கு தனது 2-வது மகளுடன் வந்து அங்கிருந்த மகளின் ஆடைகளை எடுத்துச்சென்றார். அப்போது வீட்டின் அனைத்து அறைகளையும் பூட்டியதோடு வெளிக்கதவில் உள்பக்கமாக பூட்டுபோட்டு பூட்டி விட்டுச்சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலை வீடு திறந்து கிடந்தது. அதனை பக்கத்துவீட்டை சேர்ந்த பொன்னையா என்பவர் பார்த்து சந்தேகம் அடைந்து, செல்போனில் நிர்மலாதேவியின் கணவர் சரவணபாண்டியனை தொடர்பு கொண்டு தகவல் சொன்னார்.
இதைத்தொடர்ந்து சரவணபாண்டியன் அங்கு விரைந்து வந்தார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதையும் உள்கதவு கம்பியால் நெம்பி திறக்கப்பட்டு இருப்பதையும் கண்ட அவர் இதுகுறித்து தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
துணை போலீஸ் சூப்பிரண்டு தனபால், இன்ஸ்பெக்டர்கள் அன்னராஜ், பாலமுருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.
பின்பு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தார்கள். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது நிர்மலாதேவியின் வீட்டில் இருந்து ஓடி ராமலிங்கா மில் அருகே உள்ள ஒரு ஏ.டி.எம். மையம் வரை சென்றது. பின்னர் அங்கேயே நின்று விட்டது.
இந்த திருட்டு முயற்சி பற்றி சரவணபாண்டியனிடம் போலீசார் விவரம் கேட்டறிந்தனர். வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் இருந்திருக்க வாய்ப்பு ஏதும் இல்லை என்று சரவணபாண்டியன் தெரிவித்தார்.
வீட்டில் ஏதும் திருட்டுப் போனதாக தெரியவில்லை என்று போலீசாரும் தெரிவித்தனர். பூட்டிக்கிடந்த வீட்டில் நகை ஏதேனும் கிடைக்கும் என்ற நோக்கில் இரவில் திருடன் புகுந்து இருக்கலாமென கருதுவதாக குறிப்பிட்டனர். எனினும் விடுபட்ட ஆவணங்களை கைப்பற்ற ஏதேனும் முயற்சி நடந்திருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அருப்புக்கோட்டையில் நேற்று முன்தினம் காலையில் வீட்டில் தனியாக இருந்த ஓய்வு பெற்ற நர்சை தாக்கி நகையை மர்மநபர் கொள்ளையடித்துச் சென்ற நிலையில் அன்றைய தினம் இரவே நிர்மலாதேவியின் வீட்டுக்குள் திருடன் புகுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story