தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை
தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் கூறினார்.
மதுரை,
மதுரை அரசு ஆஸ்பத்திரி குழந்தைகள் சிகிச்சை பிரிவு மற்றும் ஆராய்ச்சிதுறை சார்பில் சர்வதேச தலசீமியா தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட பராமரிப்பு மையத்தை ஆஸ்பத்திரி டீன் மருதுபாண்டியன் திறந்து வைத்தார். இதைதொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தலசீமியா நோய் மரபணுக்கள் மூலம் குழந்தைகளுக்கு வருகிறது. இந்தநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு தொடர்ந்து ரத்தம் ஏற்றுவதுதான் சிகிச்சையாக இருந்து வருகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 12,500 குழந்தைகள் தலசீமியா நோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதேபோல ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கும் நிரந்தர தீர்வு இல்லை. தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ள, மதுரையை சேர்ந்த 3 குழந்தைகளுக்கு அண்மையில் சென்னை மருத்துவமனையில் இலவசமாக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்த 3 குழந்தைகளும் நலமாக உள்ளனர்.
தற்போது தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், குழந்தைகள் சிகிச்சைப்பிரிவு பேராசிரியர் சண்முகசுந்தரம், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஷீலாராணி மல்லிகா, அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கி தலைவர் சிந்தியா, டாக்டர் ராஜராஜேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சார்பில் பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்று பலூன்களை பறக்க விட்டனர்.

Related Tags :
Next Story