பெரம்பலூரில் 1 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
பெரம்பலூரில் நேற்று மாலை 1½ மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 4 வாரத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்தது. வெயில் 100 டிகிரியையும் தாண்டி மக்களை வறுத்தெடுத்தது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்தனர். இந்நிலையில் கடந்த 4-ந்தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் தொடங்கியது. நேற்று மதியம் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குடை பிடித்தபடியும், பெண்கள் துப்பட்டாவால் தலையை முடிக்கொண்டும் சாலையில் சென்றதை காண முடிந்தது. மேலும் வெயிலினால் ஏற்படும் தாகத்தை பொதுமக்கள் இளநீர், மோர், கரும்பு ஜூஸ், பழ ஜூஸ் உள்ளிட்டவைகளை அருந்தி தீர்த்தனர். சாலையோரங்களில் விற்கப்படும் உடலுக்கு குளிர்ச்சி தரும் முலாம் பழம், தர்ப்பூசணி, உடல் சூட்டை தணிக்கும் நுங்கு ஆகியவற்றை ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கி சென்றனர்.
திடீர் மழை
இதையடுத்து நேற்று மாலை 3 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டு பலத்த காற்று வீசியது. இதனை தொடர்ந்து திடீரென்று பெய்த மழை சுமார் 1½ மணி நேரம் கன மழையாக கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே சென்றதை காண முடிந்தது. மழை பெய்த போது பெரம்பலூர் பகுதியில் மின்சாரம் இல்லை. திடீரென்று பெய்த மழையால் வெயிலின் தாக்கத்தில் இருந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பெரம்பலூர் சுற்றுப்புற கிராம பகுதிகளிலும் மழை பெய்தது.

Related Tags :
Next Story