இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி வரும் பெரம்பலூர் புதிய பஸ்நிலையம்
இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி வரும் பெரம்பலூர் புதிய பஸ்நிலையம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி, கரூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களுக்கு பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகிறது. இதனால் பஸ் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டம் நிறைந்து பரபரப்பாக காணப்படும். தற்போது பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் அதிகளவில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் சென்னை, விழுப்புரம், கடலூர், திட்டக்குடி, லெப்பைக் குடிக்காடு, தொழுதூர், திருச்சி, கடலூர், சேலம், நாமக்கல், கரூர், அரியலூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், அதற்குரிய நிறுத்தும் இடத்தில் நிறுத்த முடியாமல் உள்ளே பஸ் நிலையத்தில் உள்ள நடுரோட்டில் டிரைவர்கள் நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றி செல்கின்றனர். இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-
பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்துமிடத்தில் அதிகளவில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதால் பயணிகளும், பஸ் டிரைவர்களும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். ஆனால் பஸ் நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த கட்டண பாதுகாப்பு நிலையம் உள்ளது. ஆனால் சிலர் அதில் நிறுத்தாமல் பஸ்கள் நிற்கு மிடத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு வெளியூர்களுக்கு சென்று விடுகின்றனர். இதனால் பஸ் நிலையம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி வருகிறது.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
பஸ் நிலைய வளாகத்தில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தினால் பறிமுதல் செய்து, உரிமை யாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெரம்பலூர் நகராட்சி சார்பில் பொது அறிவிப்பு பலகை பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அது அறிவிப்பு பலகையாக தான் இருக்கே தவிர, அதன்படி நகராட்சி எந்தவித மான நடவடிக்கையும் எடுத்த பாடில்லை. மேலும் பஸ் நிலையத்தில் கடை நடத்துபவர்கள் பயணிகள் நடந்து செல்லும் பாதையையும் விட்டு வைக்காமல், அதனை ஆக்கிரமித்து பொருட்களை வைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் பயணிகள் கோடை வெயிலில் நிழலுக்கு கூட ஒதுங்க இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். பஸ் நிலைய வளாகத்தில் குப்பைகள் நிறைந்தும், பயணிகளின் கழிவறைகள் சுகாதாரமற்ற நிலையிலும் காணப்படு கின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நடபாதை கடைகளின் ஆக்கிரமிப்பை அகற்றவும், பஸ் நிலையத்தை தூய்மையாக வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story