நடுக்கடலில் விபரீதம் மின்னல் தாக்கி 4 மீனவர்கள் மயக்கம்


நடுக்கடலில் விபரீதம் மின்னல் தாக்கி 4 மீனவர்கள் மயக்கம்
x
தினத்தந்தி 10 May 2018 4:30 AM IST (Updated: 10 May 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் 4 மீனவர்கள் மயக்கம் அடைந்தனர்.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே உள்ள வடக்குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி (வயது 60). இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் இவரும், அதே பகுதியை சேர்ந்த காளியப்பன் (55), முருகானந்தம் (38), ஜெகன் (28) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென இவர்களது படகின் அருகே மின்னல் தாக்கியது. அப்போது, பயங்கர சத்தத்துடன் வெளிச்சம் அதிக அளவு ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த 4 மீனவர்களும் மயங்கி படகில் விழுந்தனர். இதையடுத்து சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து முருகானந்தம் எழுந்தார். பின்னர் அவர் உறவினர்கள் மற்றும் கடலோர காவல் குழுமத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

பரபரப்பு

பின்னர் முருகானந்தம் அந்த நாட்டுப்படகினை கரைக்கு கொண்டு வந்தார். பின்னர் கரையில் தயாராக இருந்த உறவினர்கள் மற்றும் 108 ஆம்புலன்சு ஊழியர்கள், 4 பேரையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மீன் பிடித்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் 4 மீனவர்கள் மயக்கமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story