தூத்துக்குடி மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
தூத்துக்குடி மாநகராட்சியில், கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்தும், உடனடியாக தங்களுக்கு சம்பளம் வழங்கக்கோரியும் துப்புரவு பணியாளர்கள் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகராட்சியில், கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்தும், உடனடியாக தங்களுக்கு சம்பளம் வழங்கக்கோரியும் துப்புரவு பணியாளர்கள் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.
முற்றுகை போராட்டம்
தூத்துக்குடி மாநகராட்சியில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 220 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரித்து மாநகராட்சி குப்பை உரக்கிடங்குக்கு கொண்டு செல்கின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
இதனால் அந்த தொழிலாளர்கள் நேற்று காலையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாநகர செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். தங்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்தும், உடனடியாக சம்பளம் வழங்க கோரியும் அவர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் சம்பளம் வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
அதிகாரி உறுதி
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகர நல அலுவலர் வினோத்ராஜா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, விரைவில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story