ஊரப்பாக்கத்தில் கணவர் கண்டித்ததால் பெண் தற்கொலை


ஊரப்பாக்கத்தில் கணவர் கண்டித்ததால் பெண் தற்கொலை
x
தினத்தந்தி 10 May 2018 4:05 AM IST (Updated: 10 May 2018 4:05 AM IST)
t-max-icont-min-icon

ஊரப்பாக்கத்தில் கணவர் கண்டித்ததால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் பிரியா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி விக்னேஸ்வரி (வயது 24). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களுக்கு 1½ வயதில் ஒரு குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு விக்னேஸ்வரி அதிக நேரம் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் ஏன் அதிக நேரம் டி.வி. பார்க்கிறாய் என்று கேட்டு கண்டித்துள்ளார்.

தற்கொலை

அதனால் மனம் உடைந்த விக்னேஸ்வரி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த காயம் அடைந்த விக்னேஸ்வரியை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை விக்னேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story