மணல் கடத்தலை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி
மணல் கடத்தலை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி நடந்தது.
கல்பாக்கம்,
காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் கிராமம் கீழார் கொல்லை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் கவியரசன் உள்பட வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலாற்றில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி அந்த வழியாக வந்தது. வருவாய்த்துறையினரை பார்த்ததும் டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு இறங்கி தப்பி ஓடினார். லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த லாரி உரிமையாளரான முகையூர் கிராமத்தை சேர்ந்த தண்டபாணி (வயது 36) வருவாய்த்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் லாரியில் ஏறி தப்பி செல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த வருவாய்த்துறையினர் லாரியின் குறுக்கே மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். தண்டபாணி லாரியை வேகமாக இயக்கினார். இதில் மோட்டார் சைக்கிள் முற்றிலும் சேதம் அடைந்தது. வருவாய் ஆய்வாளரையும் லாரியை ஏற்றி கொல்ல முயன்றுள்ளார்.
கைது
பின்னர் வருவாய்த்துறையினர் லாரியை பின் தொடர்ந்து சென்று மடக்கி பிடித்தனர் லாரியையும் தண்டபாணியையும் கூவத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து வருவாய் ஆய்வாளர் கூவத்தூர் போலீசில் புகார் செய்தார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் வழக்குப்பதிவு செய்து லாரி உரிமையாளரான தண்டபாணியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story