மாவட்ட செய்திகள்

சேரன்மாதேவியில் 2 சதிக்கற்கள் கண்டுபிடிப்பு + "||" + In ceranmatevi 2 catikkarkal Discovery

சேரன்மாதேவியில் 2 சதிக்கற்கள் கண்டுபிடிப்பு

சேரன்மாதேவியில்
2 சதிக்கற்கள் கண்டுபிடிப்பு
சேரன்மாதேவியில் 2 சதிக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
சேரன்மாதேவி, 

சேரன்மாதேவியில் 2 சதிக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

ஆய்வு

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளங்குளி அரசு மேல்நிலைப்பள்ளியின் முதுகலை தமிழாசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான சங்கரநாராயணன் சேரன்மாதேவியில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு 2 சதிக்கற்களும், தர்மச்சந்தை மற்றும் கிணறு வெட்டியதற்கான கல்வெட்டும் இருப்பதை அவர் கண்டுபிடித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

உடன்கட்டை ஏறுதல்

கணவன் இறந்தவுடன் அவனை எரிப்பதற்காக மூட்டப்படும் தீயில் விழுந்து தன்னை மாய்த்துக் கொள்ளும் பெண்களுக்காக எடுக்கப்பட்ட நினைவுக்கல்லே சதிக்கல் என்று அழைக்கப்படுகிறது. சேரன்மாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியையொட்டி அமைந்துள்ள அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில் ஆணும், பெண்ணும் அமர்ந்த நிலையில் பொறிக்கப்பட்டு உள்ளனர். ஆண் உருவம் வலதுபுறமும், பெண் உருவம் இடதுபுறமும் காட்டப்பட்டு உள்ளன. ஆண் உருவம் வலது காலை தொங்கவிட்டு இடது காலை மடித்தும், பெண் உருவம் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டும் காணப்படுகிறது. ஆண், பெண் உருவங்களுக்கு நடுவில் மேற்பகுதியில் உடன்கட்டை ஏறிய பெண்ணும், அவளது கணவனும் மேல் உலகம் செல்லும் காட்சியும் செதுக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் நெல்லை-பாபநாசம் நெடுஞ்சாலையில் சேரன்மாதேவியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரிக்கு கிழக்குப்பகுதியில் சாலையின் வடபுறத்தில் உள்ள ஒரு சிறிய மண்மேட்டின் மீது 17-ம் நூற்றாண்டை சேர்ந்த சதிக்கல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கல்வெட்டு

சேரன்மாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்குள் கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றையொட்டி ஒரு கல்வெட்டு உள்ளது. அந்த கல்வெட்டு, மதற்கான் அலிஜி என்பவர் தர்மச்சந்தை ஒன்றை கி.பி. 1843-ம் ஆண்டு வைகாசி மாதம் 15-ந் தேதி ஏற்படுத்தினார். அதன்பிறகு கி.பி. 1860-ம் ஆண்டு ஆடி மாதம் கிணறு ஒன்றையும் வெட்டி முடித்தார் என்று தெரிவிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.