பல்கலைக்கழகம் அமைய நிலம் வழங்கியவர்கள் வேலை கேட்டு உண்ணாவிரதம்
புதுவை பல்கலைக்கழக நிலம் இழந்தோர் நலச்சங்கம் சார்பில் பல்கலைக்கழகத்திடம் நிலம் இழந்தோர் குடும்பத்தினருக்கு வேலைகேட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.
காலாப்பட்டு,
புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழக கட்டிடங்கள் கட்டுவதற்காக பிள்ளைச்சாவடி, சின்ன காலாப்பட்டு, பெரியகாலாப்பட்டு ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 820 ஏக்கர் நிலத்தை வழங்கினார்கள். அப்போது பல்கலைக்கழகத்துக்கு நிலம் கொடுத்த குடும்பத்தினர் சிலருக்கு மட்டுமே பல்கலைக்கழக நிர்வாகம் வேலை வழங்கியது.
இந்தநிலையில் புதுவை பல்கலைக்கழக நிலம் இழந்தோர் நலச்சங்கம் சார்பில் பல்கலைக்கழகத்திடம் நிலம் இழந்தோர் குடும்பத்தினருக்கு வேலைகேட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். அவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி பல்கலைக்கழக நுழைவுவாயில் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு சங்க துணைத்தலைவர்கள் குப்பன், முத்துகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். வக்கீல்கள் செல்வராசு, முத்துவேல், சங்க செயலாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் பல்கலைக்கழகத்துக்கு நிலம் வழங்கிய குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story