மாவட்ட செய்திகள்

காலி மதுபான பாட்டிலுடன் வந்த விவசாயி குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு + "||" + The farmers who come with the empty alcohol bottle are thrilled at the meeting

காலி மதுபான பாட்டிலுடன் வந்த விவசாயி குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு

காலி மதுபான பாட்டிலுடன் வந்த விவசாயி குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு
அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்துக்கு காலி மதுபான பாட்டிலுடன் விவசாயி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரக்கோணம்,

அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. தாசில்தார் பாபு தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு தாசில்தார் மதிவாணன், தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சுமதி, துணை வேளாண்மை அலுவலர்கள் சிவக்குமார், அன்பரசு, வருவாய் ஆய்வாளர்கள் கல்யாணி, சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் சமரபுரி வரவேற்றார்.


கூட்டத்தில் கலந்து கொள்ள இச்சிப்புத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு விவசாயி காலி மதுபான பாட்டிலுடன் வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் விவசாய நிலங்களில் மாலை, இரவு நேரங்களில் ‘குடிமகன்’கள் மதுபானங்களை குடித்து விட்டு போதையில் காலி பாட்டில்களை உடைத்து நிலத்தில் சிதறி போட்டு விட்டு சென்று விடுகின்றனர். இதனால் நிலத்தில் விவசாயம் செய்யும்போது பாட்டில்கள் கால்களில் குத்தி காயங்கள் ஏற்படுகிறது. ஆகவே மதுபானபாட்டில்கள் உடைத்து போடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் மதுபான கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் மதுபானம் விற்பதற்கு பதிலாக மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுபானம் விற்றால் இது போன்ற பிரச்சினைகள் வராது என்று கூறி காலி மதுபான பாட்டிலை தாசில்தாரிடம் கொடுத்தார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தாசில்தார் பாபு, காலி மதுபான பாட்டிலை வாங்கி பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பாட்டிலை பையில் வைக்குமாறு விவசாயியிடம் கூறினார். மேலும் இந்த பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

அதைத்தொடர்ந்து அரக்கோணம் தாலுகாவில் உள்ள நீர்நிலை புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள இடங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், வேளாண்மை துறையில் அரசு அறிவிக்கும் திட்டங்கள் குறித்த விவரங்களை அந்தந்த கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். எந்த திட்டத்தை விவசாயிகள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியாத அளவில் சில விவசாயிகள் இருந்து வருகின்றனர்.

வண்டல் மண் எடுப்பதற்காக கிராம நிர்வாக அலுவலரிடம் விவசாயிகள் கொடுக்கும் விண்ணப்பங்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வண்டல் மண் எடுப்பதற்கான அனுமதி சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை விவசாயிகள் தாசில்தாரிடம் வழங்கினார்கள்.

மனுவை பெற்று கொண்ட தாசில்தார் பாபு விவசாயிகளின் கோரிக்கைகளை சம்பந்தபட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் தணிகைபோளூர், இச்சிப்புத்தூர், பெருங்களத்தூர், கைனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.தொடர்புடைய செய்திகள்

1. தமிழக அரசை கண்டித்து கிராமங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
தமிழக அரசை கண்டித்து கிராமங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்துவது என விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. புள்ளம்பாடியில் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் விவசாயிகள் மறியல்
புள்ளம்பாடியில் முள்ளால் சாலையில் உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டதால் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.
3. ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வாய்க்கால் அமைக்கக்கோரி விவசாயிகள் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்
ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர வாய்க்கால் அமைக்க கோரி விவசாயிகள் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தினர்.
4. தொடர்ந்து மழை பெய்தும் நாகுடி களக்குடி குளத்திற்கு தண்ணீர் வரவில்லை விவசாயிகள் கவலை
தொடர்ந்து மழை பெய்தும், நாகுடியில் உள்ள களக்குடி குளத்திற்கு தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
5. வயல்களில் மழைநீர் தேக்கம்: சம்பா நெற்பயிர்கள் அழுகும் அபாயம் விவசாயிகள் கவலை
பொறையாறு பகுதியில் வயல்களில் மழைநீர் தேங்கி இருப்பதால் சம்பா நெற்பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.