மாவட்ட செய்திகள்

நெல்லை தாமிரபரணி ஆற்றில் ரூ.18 கோடியில் புதிய பாலம் அமைக்கும் பணி தீவிரம் + "||" + Nellai Thamiraparani River Rs 18 crores The new bridge construction work intensity

நெல்லை தாமிரபரணி ஆற்றில் ரூ.18 கோடியில் புதிய பாலம் அமைக்கும் பணி தீவிரம்

நெல்லை தாமிரபரணி ஆற்றில்
ரூ.18 கோடியில் புதிய பாலம் அமைக்கும் பணி தீவிரம்
நெல்லை தாமிரபரணி ஆற்றில் ரூ.18 கோடியில் புதிய பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நெல்லை, 

நெல்லை தாமிரபரணி ஆற்றில் ரூ.18 கோடியில் புதிய பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

புதிய பாலம்

நெல்லை மாநகர பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி கொண்டே செல்கிறது. இதனை கவனத்தில் கொண்டு நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றின் பாலத்தின் அருகில் ரூ.18 கோடியில் புதிய பாலம் கட்ட தமிழக அரசு முடிவு செய்யப்பட்டது. இதற்கான மண்பரிசோதனை செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து புதிய பாலம் கட்டும் பணி கடந்த மாதம் 6-ந் தேதி தொடங்கியது. இந்த பாலம் நெல்லை கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை பின்புறம் தொடங்கி, முத்துராமலிங்க தேவர் சிலையை இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

தற்போது உள்ள பாலம் போல் அகலமாக அமைக்கப்படுகிறது. 237 மீட்டர் நீளமும், 14.8 மீட்டர் அகலமும் கொண்ட வகையில் இந்த பாலம் அமைக்கப்பட உள்ளது. 10 ராட்சத தூண்கள் அமைக்கப்படுகின்றன. பாலத்தில் இரு பகுதியிலும் இணைப்பு சாலை அமைக்கப்படுகிறது. இந்த இணைப்பு சாலை காங்கிரஸ் அலுவலகம் முன்பு வரை அமைக்கப்பட இருக்கிறது.

பணிகள் தீவிரம்

இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இணைப்பு சாலைக்காக அறிவியல் மையம் அருகே நேற்று எந்திரங்கள் மூலம் மண் அள்ளப்பட்டது. இதேபோல் தூண்கள் அமைப்பதற்கான எந்திரங்கள் மூலம் குழிகளும் தோண்டப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த புதிய பாலம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.