மாவட்ட செய்திகள்

பலத்த சூறாவளி காற்று வீசியது: மின்கம்பங்கள் சாய்ந்ததால் இருளில் மூழ்கிய நெய்க்காரப்பட்டி + "||" + Strong hurricane wind blows: The wicker is soaked in the darkness of the wires

பலத்த சூறாவளி காற்று வீசியது: மின்கம்பங்கள் சாய்ந்ததால் இருளில் மூழ்கிய நெய்க்காரப்பட்டி

பலத்த சூறாவளி காற்று வீசியது: மின்கம்பங்கள் சாய்ந்ததால் இருளில் மூழ்கிய நெய்க்காரப்பட்டி
நெய்க்காரப்பட்டி பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியதன் காரணமாக மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் நெய்க்காரப்பட்டி பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. மேலும் 100-க்கும் மேற்பட்ட மரங்களும் சாய்ந்து நாசமாகின.
நெய்க்காரப்பட்டி,

பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரத்தில் பலத்த காற்று வீசுகிறது. அதன் பின்னர் சிறிது நேரம் மழையும் பெய்கிறது. இதனால் பழனி தாலுகா பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், வாழை மரங்களும் சேதமடைந்து வந்தன. இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணிக்கு மேல் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியில் திடீரென சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக நெய்க்காரப்பட்டி பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முறிந்து சாய்ந்தன.


ஒரு சில மின்கம்பங்கள் வீடுகள் மீதும் விழுந்தன. ஆனால் சூறாவளி காற்று வீசியதுமே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் உயிர்பலி ஏதும் ஏற்படவில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நெய்க்காரப்பட்டி பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. சூறாவளி காற்று வீசியதன் காரணமாக சாலையோரங்களில் இருந்த 100-க்கும் மேற்பட்ட புளியமரங்கள், வேப்பமரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் நெய்க்காரப்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் நெய்க்காரப்பட்டி ஐகோர்ட்டு பத்ரகாளியம்மன் கோவில் அருகே இருந்த 100 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் ஒன்று சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேரோடு சாய்ந்தது அருகில் நிறுத்தப்பட்டிருந்த மினிவேன் மீது விழுந்தது. இதில் மினிவேன் அப்பளம் போல் நொறுங்கியது. அதே போல் நெய்க்காரப்பட்டி பகுதியில் உள்ள ஓடு, கூரையால் வேயப்பட்ட 30-க்கும் மேற்பட்ட வீடுகளும் சூறாவளி காற்றால் சேதமடைந்தன.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நெய்க்காரப்பட்டி பகுதியில் இன்று (அதாவது நேற்று) வரலாறு காணாத வகையில் சூறாவளி காற்று வீசியது. காற்றின் வேகம் பல மடங்கு அதிகமாக இருந்தது. அதன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் கூரை, ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. மேலும் மரங்கள், மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் நாங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தோம். சுமார் 15 நிமிடத்தில் நெய்க்காரப்பட்டி பேரூராட்சியையே சூறாவளி காற்று உலுக்கிவிட்டது. ஆனால் சம்பவம் நடந்து பல மணி நேரம் ஆகியும் எந்த அதிகாரியும் எங்கள் பகுதிக்கு வந்து பார்வையிடவில்லை என்றனர்.

இதேபோல் கீரனூர் பகுதியில் நேற்று மாலை ஆலங்கட்டி மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது. பல மாதங்களுக்கு பின்பு ஆலங்கட்டி மழை பெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 


தொடர்புடைய செய்திகள்

1. பேராவூரணி பகுதியில் பலத்த காற்று; 13 மரங்கள் சாய்ந்தன 46 மின்கம்பங்கள் சேதம்
பேராவூரணி பகுதியில் பலத்த காற்று வீசியதால் 13 மரங்கள் சாய்ந்தன. 46 மின்கம்பங்கள் சேதமடைந்தன.
2. தினம் ஒரு தகவல் : தூங்கும்போது காற்றோட்டம் அவசியம்
இன்று பலரும் 10-க்கு 10 அடி அளவுகொண்ட சிறிய அறையில் கதவு ஜன்னல் எல்லாவற்றையும் அடைத்துவிட்டு ஏ.சி. போட்டு தூங்குகிறார்கள்.
3. கடற்பகுதியில் பலத்த சூறாவளி காற்று: நாட்டுப்படகு - விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
தஞ்சை மாவட்ட கடற்பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் 10 ஆயிரம் மீனவர்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
4. தஞ்சை பகுதியில் பலத்த காற்றினால் நெற்பயிர்கள் சாய்ந்தன
தஞ்சை பகுதியில் பலத்த காற்றினால் நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
5. தஞ்சையில், பலத்த காற்று வீசியது மரக்கிளைகள் முறிந்து விழுந்தன;போக்குவரத்து பாதிப்பு
தஞ்சையில், பலத்த காற்று வீசியதால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.