மாவட்ட செய்திகள்

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பலி + "||" + A school student kills electricity

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பலி

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பலி
நேற்று அருகே உள்ள தனது சித்தப்பாவின் வீட்டுக்கு சென்ற சக்திவேல் அங்கிருந்த டி.வி.யை போட முயன்றான். அப்போது, சுவிட்ச் போர்டில் இருந்து திடீரென சக்திவேலின் மீது மின்சாரம் பாய்ந்தது.
திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள பித்தளைப்பட்டியை சேர்ந்தவர் சிவராமன். இவருடைய மகன் சக்திவேல் (வயது 15). இவன் 9-ம் வகுப்பு படித்துவிட்டு கோடை விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தான். நேற்று அருகே உள்ள தனது சித்தப்பாவின் வீட்டுக்கு சென்ற சக்திவேல் அங்கிருந்த டி.வி.யை போட முயன்றான்.

அப்போது, சுவிட்ச் போர்டில் இருந்து திடீரென சக்திவேலின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவன் படுகாயம் அடைந்தான். உடனே அக்கம்பக்கத்தினர் அவனை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவன் பரிதாபமாக பலியானான். இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.